ஜோதிடம்

About

ஜோதிடம் - வேதகால ஜோதிடம்

ஜோதிட சாஸ்திரம் இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக ரிஷிகளாலும் ஆன்றோர்களாலும் இயற்றப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. வானமண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பினும் சூரிய மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் பாதைகள் மட்டுமே (ZODIAC) சூரியன் மற்றும் 9 கோள்களும் செல்கின்றன. இந்த நட்சத்திரங்களும் கோள்களும் பூமி மீதும், பூமியில் வாழும் உயிர்கள் மீதும் மின்காந்த அலைகள் (Electro Magnetic Waves) மூலமாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஓர் அறிவியல் சார்ந்த பயன்படக்கூடிய கலை. மக்களின் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள இது ஓர் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.